என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 18 பன்றிகள் பிடிப்பட்டன
- பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- மாநகராட்சி எல்லைக்குள் சுற்றி திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்பு நகர், பூக்காரத் தெரு, முனியாண்டவர் காலனி, விளார்ரோடு, 20 கண் பாலம் ஆகிய இடங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக காணப்பட்டது. பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து பன்றிக ளைப் பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தெருக்களில் சுற்றி தெரிந்த பன்றிகளை போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட கோட்ட துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் 18 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.
மேலும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் இது போன்று பன்றிகள் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.
சுகாதார சீர்கேடு விளைவிக்கும்படி பன்றிகள் மாநகராட்சி எல்லைக்குள் சுற்றி திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்தார்.