search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூராட்சி செயல் அலுவலரிடம் பொதுமக்கள் மனு
    X

    பேரூராட்சி செயல் அலுவலரிடம் பொதுமக்கள் மனு

    • குடியிருப்பு பகுதிகள் வனமாக மாற்றப்பட்டுள்ள தகவல் அச்சம் தருவதாக வேதனை
    • நிலங்களை மறுஅளவீடு செய்து பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டுகோள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட காந்தி நகா் மற்றும் பல்வேறு பகுதிகளில் 3 தலைமுறைக்கும் மேலாக வசிக்கும் மக்கள் பேரூராட்சிக்கு வீட்டு வரி செலுத்தி வருகின்றனா்.

    இவ்வாறு பல ஆண்டுகளாக மக்கள் வசிக்குமிடங்கள் வனப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக பொதுமக்களிடம் வனத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

    இந்நிலையில் காந்தி நகா் விவசாயிகள் சங்கத்தினா் பேரூராட்சி செயல் அலுவலா் ஹரிதாஸிடம் மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:- இப்பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருப்பதோடு முறைப்படி வரியும் செலுத்தி வருகிறோம். இப்பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது.

    இந்நிலையில் குடியிருப்புப் பகுதிகள் வனமாக மாற்றப்பட்டுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றப்பட்டுள்ள நிலங்களை மறுஅளவீடு செய்து பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

    Next Story
    ×