என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கயத்தாறு அருகே காற்றாலை வாகனங்களை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்
- புதுக்கோட்டை கிராமத்தின் வழியாக 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தினமும் சென்று வருவதால் புழுதி மண்டலமாக மாறி உள்ளது.
- தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் காற்றின் வேகத்தால் இந்த புழுதிகள் இங்கு பயிரிடப்பட்டுள்ள பருத்தி உள்பட பயிர்கள் மீது மணல்கள் பட்டதால் பூ கருகி நாசமாகும் நிலை உள்ளது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தின் வழியாக காற்றாலை கனரக வாகனங்கள் சென்று வருதவால் பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் ெதாடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை பகுதி வழியாக சென்ற கனரக வாகனங்களை அப்பகுதியினர் சிறைபிடித்து இன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறும்போது, எங்களது ஊரின் வழியாகவும், விவசாயம், வாகன தடங்கள் வழியாகவும் 100-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தினமும் சென்று வருவதால் புழுதி மண்டலமாக மாறி உள்ளது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் காற்றின் வேகத்தாலும் இந்த புழுதிகள் இங்கு பயிரிடப்பட்டுள்ள பருத்தி, மக்காச்சோளம், வெண்டை, கத்தரி உள்பட பயிர்கள் மீது மணல்கள் பட்டதால் பூ கருகி நாசமாகும் நிலை உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.