search icon
என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு காலாண்டு தேர்வில் 10,12 - ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி பகுப்பாய்வினை மீளாய்வு செய்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு காலாண்டு தேர்வில் 10,12 - ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி பகுப்பாய்வினை மீளாய்வு செய்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

    அரசுப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியின் வாயிலாக இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு, தலைமை யாசிரியர்கள் வழிகாட்டிட வேண்டும். மேலும் அரசுப்பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதல் 3 இடங்களுக்குள் புதுக்கோட்டை வர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அன்றாடம் பள்ளியில் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்யக்கூடிய பணிகளை மறக்காமல் பதி வேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் தேவைப்படும் விலையில்லா பேருந்து பயண அட்டை சார்ந்த தகவல்களை உடனடியாக போக்குவரத்துக்கிளைக்கு அளித்திட வேண்டும். 6- ம் வகுப்பு முதல் காலாண்டுத் தேர்வு தேர்ச்சி சார்ந்த விபரங்களை மீண்டும் சரிபார்த்து சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய் யவேண்டும். 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை எழுதும் மற்றும் வாசிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்தி தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படைத்தி றனை உரிய காலத்திற்குள் 100 சதவீதம் அடைய பாடுபட வேண்டும். பள்ளி நலனில் அக்கறையுள்ள முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோரை ஒருங்கி ணைத்து பள்ளியின் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் 10,12 - ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வில் 80 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகள் ஒவ்வொன்றையும், தனித் தனியாக பாடவாரியாக பகுப்பாய்வு செய்து 100 சதவீதம் தேர்ச்சி பெற ஆலோசனைகள் வழங்கி னார். இந்த மீளாய்வு கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை ரமேஷ், அறந்தாங்கி ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர்கள் முருகையன், ராஜூ, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு.மாரிமுத்து, இளைய ராஜா மற்றும் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • புதுக்கோட்டை டவுன் வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன,
    • தொடர்ந்து கோயில்கள் சிறப்பு ஆராதனைகளுக்கு பின் மேல் தளத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டன.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை டவுன் வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன, தொடர்ந்து கோயில்கள் சிறப்பு ஆராதனைகளுக்கு பின் மேல் தளத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டன. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சொக்கப்பான் கொளுத்தப்பட்டன, நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று கலந்து கொண்டனர். இதேபோல் குமரமலை மலைமேல் பாலதண்டாயுதபாணி கோவிலிலும் தீபதிருவிழா நடைபெற்றது.

    • புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கருங்குழிகாடு கிராமத்தில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • இதில் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து 87 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெட்டிவயல் கருங்குழிகாடு கிராமத்தில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இதில் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து 87 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

    3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பெரியமாடு பிரிவில் 13 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 34 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு பிரிவில் 40 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 2 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

    மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து போட்டியை கண்டு ரசித்தனர்.அறந்தாங்கி காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலின் முன்பு வர்த்தகர் கழகம் சார்பில் அன்னதான சமையல் கூடம் அமைக்கப்பட்டது.
    • விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

    பொன்னமராவதி

    பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவிலின் முன்பு வர்த்தகர் கழகம் சார்பில் அன்னதான சமையல் கூடம் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது.

    அதையடுத்து நடைபெற்ற திகுக்கார்த்திகை விழாவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரணியர்க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச்சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

    விழாவில் வர்த்தகர் கழகத்தலைவர் எஸ்.கே.எஸ்.பழனியப்பன், தேய்பிறை அஷ்டமி மற்றும் கார்த்தகை வழிபாட்டு குழு நிர்வாகிகள் ராம சேதுபதி, பி.பாஸ்கர்,எம்.குமரன், மணிகண்டன், முருகேசன், சதீஸ்குமார், எஸ்.பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதே வேளையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பொது மக்களிடயே அச்சத்தையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாக திட்டமிட்டுள்ளது.

    அதன்படி பொன்னமராவதி பாப்பாயி ஆட்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு, கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர், விராலிமலை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் முகாம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    வீடுகள் தோறும் சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டையில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது, திறந்த வெளியில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள், டயர்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    • புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சமூக மனநலம் மற்றும் பராமரிப்பாளர்களின் பிரச்சினையை புரிந்து கொள்வது குறித்த தன்னார்வர்களுக்கான பயிற்சி நடைப்பெற்றது.
    • மனநலம் பாதிக்கபட்டவர்களை பராமரிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களின் மேம்பாட்டிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சமூக மனநலம் மற்றும் பராமரிப்பாளர்களின் பிரச்சினையை புரிந்து கொள்வது குறித்த தன்னார்வர்களுக்கான பயிற்சி நடைப்பெற்றது. திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 48 ஊராட்சி மற்றும 3 பேரூராட்சிகள் உள்ளிட்ட 51 பகுதிகளில் உள்ள மனநலம் பாதிக்கபட்டவர்களை பராமரிக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களின் மேம்பாட்டிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதற்கான தொடக்க விழாவில் கிராம பெண்கள் மேம்பாட்டு அமைப்பு இயக்குநர் தாஸ், நடேஷ், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், பயிற்சியாளர்கள் திருவள்ளுர் சூசைராஜ், புதுக்கோட்டை பேராசிரியர் சலோமி சங்கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம் ஆய்வு செய்தார்.
    • பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் கூட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம் ஆய்வு செய்தார். கந்தர்வக்கோட்டை சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மாச்சத்திரம், நார்த்தாமலை, விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொண்டைமான்நல்லூர், திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நமணசமுத்திரம், ஆலங்குடி சட்டமன்றத் தொகு திக்குபட்ட கைக்குறிச்சி, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வைரம் மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் கலைஞர் கருணாநிதி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் முகாம்களை அவர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், மண்டல அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சம்பவத்தன்று இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
    • சிறிது நேரத்தில் சந்தியா உடலில் நிறம் மாற்றம் ஏற்பட்டது.

    கறம்பக்குடி

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மலையூர் மீனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரின் மகள் சந்தியா(வயது 15). அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அலறி துடித்துள்ளார். பெற்றோர்கள் கேட்ட போது, ஏதோ கடித்து விட்டதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சந்தியா உடலில் நிறம் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்தியாவை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்ட போது, சந்தியாவை பாம்பு தீண்டியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் சந்தியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் அறிவியல் இயக்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் வீரமுத்து தலைமையில் நடைபெற்றது.
    • மாவட்டம் முழுவதும் அறிவியல் பிரச்சாரப் பணி களை தீவிரமாக மேற்கொள் வது, புதுக்கோட்டையில் செயல்படும் வகையில் தமிழக அரசு புதிதாக சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும்,

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் அறிவியல் இயக்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் வீரமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணைச்செய லாளர் ஜெயராம் அனை வரையும் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர்சதாசிவம் எதிர்கால பணிகள் குறித்தும் மாநில பொதுக்குழு உறுப்பி னர் மணவாளன் மாநில செயற்குழு முடிவு கள் குறித்தும் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜெயபாலன், ராம திலகம், கமலம், ரகமதுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் அறிவியல் பிரச்சாரப் பணி களை தீவிரமாக மேற்கொள் வது, புதுக்கோட்டையில் செயல்படும் வகையில் தமிழக அரசு புதிதாக சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக பாலித்தீன் பைகள் பயன்பாட்டைக் குறைத்து காகிதப்பைகளை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார பணிகளை மேற்கொள்வது, தமிழக அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும், தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை விரைந்து வெளியிட வேண்டும், சென்னையி லிருந்து செங்கோட்டை வரை புதுக்கோட்டை வழியாக வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினந்தோறும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிறைவாக மாவட்ட இணைச் செயலாளர் பிச்சைமுத்து நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.
    • 14, 17, 19 ஆகிய வயது மாணவ, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.

    14, 17, 19 ஆகிய வயது மாணவ, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற போட்டியில் 350 மாணவிகளும், இரண் டாம் நாள் நடைபெற்ற போட்டியில் 450 மாணவர்க ளும் கலந்து கொண்டனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா வழிகாட்டு தல்படி நடை பெற்ற இப்போட்டியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள்வேலுச்சாமி, குரு.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் இடத்தைப்பிடித்த மாண வர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். போட்டியினை புதிய விளையாட்டுப்போட்டிக் கான மாவட்ட இணைச்செய லாளரும், காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளி யின் உடற்கல்வி ஆசிரியரு மான காசி.ராஜேந்திரன் ஒருங்கிணைப்பு செய்தார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டேக்வாண்டோ சங்கத்தின் மாவட்டச்செயலாளர் பால சுப்பிரமணியன், நாகப்பட்டி னம் டேக்வாண்டோ சங்கத்தின் மாவட்டச்செய லாளர் தர்மா, உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் அடையாளம் தெரியாதவர்களால் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் எஸ்.பி. ரமேஷ் தலைமையில், 2 டி.எஸ்.பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

    பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 119 பேருக்கு ரத்த மாதிரிகளை எடுக்க கோர்ட்டு திட்டமிட்ட நிலையில் 5 சிறுவர்கள் உள்பட 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.

    • புதுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் மெர்சி ரம்யா விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்து கூறினர். கூட்ட முடிவில் கலெக்டர் பேசும்போது, விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதபிரியா, வேளாண் இணை இயக்குனநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×