search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி சிவன் கோவில் பகுதியில் இனி மழை நீர் தேங்காது - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
    X

    தூத்துக்குடி சிவன் கோவில் பகுதியில் நடைபெற்று வரும் புதிய வடிகால் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்ட காட்சி.

    தூத்துக்குடி சிவன் கோவில் பகுதியில் இனி மழை நீர் தேங்காது - மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

    • லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி ரூரல் பகுதி மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் லூர்தம்மாள்புரம், ராஜீவ்காந்தி நகர் ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து 1-ம் கேட் மற்றும் சிவன் கோவில் பகுதியில் நடைபெறும் புதிய வடிகால் அமைக்கும் பணிகளையும் துறைசார்ந்த அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த வடிகால்கள் தூர்ந்து போய் நீர் செல்வதற்கு பெரும் தடையாக இருந்து வந்தது.

    எனவே தேவையான இடங்களில் கல்வெட்டுகள் அமைக்கவும் உத்தரவிட்டு ள்ளேன், இதனால் இனிமேல் இந்த பகுதியில் மழை நீர் தேங்காது என்று உறுதி அளிக்கிறேன் என்று அப்பகுதி பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.

    ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன்,ஜஸ்பார், மண்டல தலைவர் நிர்மல்ராஜ்,மாநகர கவுன்சிலரும், பகுதி தி.மு.க. செயலாளருமான சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் ஜெயசீலி, அந்தோணிமார்சுலின், முன்னாள் கவுன்சிலர் வட்டசெயலாளர் ரவீந்திரன், மாணவரணி சோமநாதன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×