search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்சு வழங்க வேண்டும்
    X

    தொண்டியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

    108 ஆம்புலன்சு வழங்க வேண்டும்

    • 108 ஆம்புலன்சு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    தொண்டி

    தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட சின்னத் தொண்டி கிராமத்தில் பேரூராட்சிக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் நில அளவை செய்து வேலி அமைப்பது கடற்கரை எதிரே நல்ல தண்ணீர் ஊற்று உள்ள முடிச்சலான் தோப்பில் உள்ள கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அங்கு அமைந்துள்ள 4 கிணற்றைச் சுற்றிலும் கம்பி வேலி சுற்றி இரும்பு கதவு அமைக்க வேண்டும்.

    பேரூராட்சிக்கு சொந்தமான 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே உள்ள பம்ப் ரூமிற்கு மின் இணைப்பு மற்றும் மராமத்து பணி செய்ய வேண்டும்.

    தொண்டியில் இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுவதாலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவசர கால மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவனை கொண்டு செல்வதற்கும், இங்கு முறையான அவசர ஊர்தி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய அவசர ஊர்தியான 108 வாகனம் அரசு வழங்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்வது, டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் புகை போக்கி எந்திரம் வாங்குதல், உயர் மின் அழுத்தம் காரணமாக பழுதடைந்த மின் விளக்குகளுக்குப் பதிலாக புதிதாக 164 மின் விளக்குகள் பொருத்துவது போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×