search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்பு
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்பு

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
    • மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர் என்று மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தெரிவித்துள்ளார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து குடும்பம் குடும்பமாக அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்களும் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதே அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தமிழக மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

    தமிழ்நாட்டின் உரிமை களையும், தமிழ் மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிக்கு இந்த மதுரை மாநாடு அடித்தளமாக அமையும்.

    புனித ஜார்ஜ்கோட்டை யில் மக்கள் விரும்பும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பார். ஜெயலலிதாவிற்கு பிறகு அவரது விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×