என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி
- கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னில் கல்லூரியில் இந்த ஆண்டு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் வருகை தந்து வளாகத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 605 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அலாவுதீன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக் சிறப்புரையாற்றினார். கல்லூரி துணை முதல்வரும், வேலைவாய்ப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளாகுமான ஷேக் தாவூது 2023 ஆண்டுக்குரிய வேலை வாய்ப்பு அறிக்கையை சமர்ப்பித்தார். அவர் பேசும்போது கூறியதாவது:-
கடந்த 20 ஆண்டுகளில் இங்கு நடந்த வளாகத் தேர்வுகள் மூலம் 14 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 605 மாணவர்கள் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
இங்கு பயிலும் எந்திரவியல் துறை, மின்னியல் துறை, மின்னணுவியல் துறை, மெரைன் என்ஜினீயரிங், கனிணித்துறை மாணவர்கள் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் எந்திரவியல் துறை தலைவர் டாக்டர் கணேஷ்குமார் வரவேற்றார்.வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முகமது சதக் அறக்கட்டளை இயக்குநர் எஸ்.எம்.ஒய்.முகமது சதக், கல்லூரி முதல்வர் அலாவுதீன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டனர்.கல்லூரி துறைத் தலை வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் மரியதாஸ் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் ஷேக் தாவூது, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி டாக்டர் கணேஷ்குமார் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்