search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு தாலுகா மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் வேண்டும்
    X

    கீழக்கரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் உசேன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    அரசு தாலுகா மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் வேண்டும்

    • கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
    • மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் தலைமையில் சமூகக் கூட்டம் நடந்தது.

    கீழக்கரை

    கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் தலைமையில் மாவட்ட சுகாதார சமூகக் கூட்டம் நடந்தது. இதில் முகமது சதக் கல்விக் குழுமம், கீழக்கரை அனைத்து சமுதாய கூட்ட மைப்பு ஆகியவற்றிற்கு கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை உள் வளா கத்தில் தூய்மைப்பணியை மேற்கொண்டதற்காக பாராட்டு தெரிவித்து நன்றி தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    கீழக்கரை தாலுகா புதிய மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை ரூ.5.45 கோடி போதுமானதாக இருக்காது என்பதால் நிதியை அதிகப் படுத்தி கோருதல், பகல் மற்றும் இரவு பணிகளில் செவிலியர் மற்றும் பணியா ளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்.

    பிணவறைக்கு சடலங்களை பாதுகாப்பாக வைக்க குளிரூட்டப்பட்ட வசதிகள் செய்து நவீனப் படுத்துதல், ஆய்வக உபக ரணங்கள் பழமையடைந்து விட்டதால் புதிய உப கரணங்கள், உபரி பொருட்கள் அதிகப்படுத்தி வாங்க கோருதல், ஆர்.ஓ.பி ளாண்ட் குடிநீர் வசதியை மருத்துவ மனையின் உபயோகத்திற்கு அமைத்து தர கோருதல், மருத்துவ மனை முன்பகுதியில் இருள் நீக்க நகராட்சி மூலம் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.

    கீழக்கரை நகராட்சியிடம் மருத்துவமனை சுற்றுப் புறத்தை தூய்மைப்படுத்து வதற்கு வெளியாட்கள் அனுப்பக் கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஜூன் மாதத்தில் இருந்து முகமது சதக் கல்விக்குழுமம், மற்றும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் மூலம் 2 தூய்மைப் பணியாளர்களை மருத்துவமனை உட்பகுதியை சுத்தம் செய்ய அனுப்பியதற்கு கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் நன்றியை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் வழங்க வுள்ளதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார். இதில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளர் சேக் உசேன், தி.மு.க. நகர் செயலாளர் பஷீர் அகமது, அ.தி.மு.க.நகர் செயலாளர் ஜகுபர் உசேன், கம்யூனிஸ்டு நகர் செயலாளர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×