என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் : ஓய்வு அறையில் உள்ள கடையை அகற்ற 15 நாட்கள் கெடு
- ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் உள்ள கடையை அகற்ற 15 நாட்கள் கெடு விடுக்கப்பட்டுள்ளது.
- கடை அகற்றிய பிறகு முழுமையாக பயணிகளுக்கான ஓய்வு அறையாக பயன்படுத்தப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகராட்சி 21-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராமசுப்பிரமணியன். இவர் சென்னையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவரிடம் மனுதாக்கல் செய்தார்.
அதில், மக்கள் இலவசமாக பயன்படுத்த கட்டிய கழிப்பறைகளில் கட்டணம் வசூலிக்கின்றனர். ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் பேக்கரி கடை நடத்துவதாகவும் புகார் தெரிவித்தார்.
இந்த மனு மீது கடந்த மாதம் விசாரணை நடந்தது. ராமநாதபுரம் நகராட்சி பொதுகழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதை சுகாதார ஆய்வாளர் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். கழிப்பறைகளுக்கு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்க கூடாது.
புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் ஓய்வறையில் உள்ள கடை உரிமை காலத்தை நீட்டிக்க கூடாது.ஆகஸ்டு 1-ந்தேதி முதல் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறையாக பயன்படுத்த வேண்டும் என்று ஜூலை 27-ந்தேதி உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்ற நடுவர் மாலிக் பெரோஸ்கான் உத்தரவிட்டார்.
இருப்பினும், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இதுவரை அந்த கடை அகற்றப்படவில்லை. பயணிகள் ஓய்வு எடுக்கும் பகுதியில் இருக்கைகள் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து நகராட்சி வருவாய் ஆய்வாளர் சேகர் கூறுகையில், நடுவர் மன்ற உத்தரவுப்படி கடையை அகற்ற 15 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளோம். கடை அகற்றிய பிறகு முழுமையாக பயணிகளுக்கான ஓய்வு அறையாக பயன்படுத்தப்படும், என்றார்.