search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி திருவிழா கொடியேற்றம்
    X

    கொடியேற்றத்தில் கலந்து கொண்ட பக்தர்கள்.

    ஆடி திருவிழா கொடியேற்றம்

    • ராமேசுவரம் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இந்த விழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 17 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    ஆடித் திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று கோவில் திருக்கல்யாணம் மண்டபத்தில் வாஸ்து ஜெயந்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதனைதொடர்ந்து இன்று தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை ஒட்டி ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு பூஜை கள், தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணை யர் மாரியப்பன் மற்றும் அலுவலர்கள், பணி ணயாளர்கள் கலந்து கொண்டனர்.

    முக்கிய திருவிழாவான தேரோட்ட நிகழ்ச்சி வருகிற 31-ந்தேதி நடக்கிறது. ஆகஸ்டு 2-ந் தேதி மாலை மாற்றும் நிகழ்ச்சியும், 3-ந் தேதி பர்வதவர்தனி அம்மன்-ராமநாதசாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி யும் நடைபெற உள்ளது. 8-ந் தேதி மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெறுவதோடு திருவிழா முடிவடைகிறது.

    ஆடித்திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு 17 நாட்களில் தினசரி சுவாமி-அம்மன் அலங்காரத்துடன் புறப்பாடாகி கோவிலை சுற்றி 4 ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    Next Story
    ×