search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் இல்லாமல் வறண்ட பூமியாக மாறும் சக்கரக்கோட்டை கண்மாய்-எஸ்.டி.பி.ஐ.கோரிக்கை
    X

    ரியாஸ்கான்

    தண்ணீர் இல்லாமல் வறண்ட பூமியாக மாறும் சக்கரக்கோட்டை கண்மாய்-எஸ்.டி.பி.ஐ.கோரிக்கை

    • சக்கரக்கோட்டை கண்மாய் தண்ணீர் இல்லாமல் வறண்ட பூமியாக மாறுகிறது.
    • நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ.கோரிக்கை விடுத்துள்ளது.

    கீழக்கரை

    தண்ணீர் இல்லாமல் வறண்ட பூமியாக மாறிக்கொண்டிருக்கும் பறவைகள் சரணாலயமான சக்கரக்கோட்டை கண்மாயை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாத புரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரிய பட்டினம் ரியாஸ்கான் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளின் சரணாலயமாக திகழும் சக்கரைக்கோட்டை கண்மாயில் தண்ணீர் முழுவதும் வற்றிவிட்டது.

    பறவைகள் தண்ணீரின்றி வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும் அந்த கண்மாயை சுற்றியுள்ள பகுதிகளிலும் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் நகரிலும் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த நிலை தொடரும் பட்சத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்கு ஆளாக நேரிடும். இந்த கண்மாயில் முறையாக தூர்வாரும் பணி கடந்த வருடங்களில் நடைபெ றாததே இதற்கு காரணம்.

    தற்போது தண்ணீர் முழுவதும் வற்றிவிட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கண்மாயை ஆக்கிரமித்து இருக்கும் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, பருவமழை தொடங்குவதற்கு முன்பே கண்மாயை ஆழப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் உடனே செய்ய வேண்டும்.

    Next Story
    ×