search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமக்குடியில் சித்திரை திருவிழா: விசாலாட்சி அம்பிகா-சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம்
    X

    பரமக்குடியில் சித்திரை திருவிழா: விசாலாட்சி அம்பிகா-சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம்

    • பரமக்குடியில் நடந்த சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது.
    • விசாலாட்சி அம்பிகா-சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தராஜபெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த விசாலாட்சி அம்பிகா-சமேத சந்திரசேகர சுவாமி ஈஸ்வரன் கோவிலில் சித்திரைத் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் உட்பட பஞ்ச மூர்த்திகள் வீதி வலம் வருகின்றனர்.

    கடந்த 30-ந்தேதி இரவு திக்குவிஜயம் நடந்தது. 1-ந்தேதி கமல வாகனத்தில் விசாலாட்சி அம்மன் தபசு கோலத்தில் அருள் பாலித்தார். நேற்று காலை சந்திரசேகர சுவாமி மாப்பிள்ளை கோலத்தில் ரத வீதிகளில் உலா வந்தார்.

    தொடர்ந்து ஈஸ்வரன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் சுவாமி-அம்பாள் வீற்றிருந்தனர். சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் முன்னி லையில் விசாலாட்சி அம்பிகை-பிரியாவிடையுடன் சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

    இதில் கலந்து கொண்ட பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தை கோவிலில் புதுப்பித்து அணிந்து கொண்டனர். மகா தீபாராதனைக்கு பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. பரமக்குடி சுந்தராஜ பவனத்தில் அன்னதான குழுவினரால் பக்தர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.

    பரமக்குடி மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று மாலையில் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்தது. பின்னர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சிக்கும்-சுந்தரே சுவரருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×