search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை
    X

    நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை

    • நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • போதுமான மருத்துவ வசதியில்லை.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் அருகே உள்ள நத்தம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரு கிறது. இந்த பகுதியில் ஏராளமான கிராமங்களும் அபிராமம் நகரில் குடியி ருந்து வருபவர்களும் உடல் நலம் பாதிக்கப்பட்டால் இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வருகின்றனர்.

    அபிராமம், அகத்தாரிருப்பு நத்தம், அச்சங்குளம், அ.பச்சேரி, பாப்பனம் தீர்த்தாண்டதானம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு போதுமான மருத்துவ வசதியில்லை.

    அவசர தேவைக்கு அபி ராமத்திலிருந்து கமுதி அல்லது 50 கிலோமீட்டர் தூரம் உள்ள பரமக்குடிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே நத்தம் ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்த பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகவும், விவசாயிகள், கூலி தொழி லாளர்கள் நிறைந்த பகுதி யாகவும் உள்ளது. உடல் நிலை பாதிக்கப்பட்டால் அரசு ஆஸ்பத்திரியை நம்பி செல்லும் நிலை உள்ளது.

    பாம்பு கடி மற்றும் சாலை விபத்து போன்ற அவசர சிகிச்சைக்கு வரும் நோயா ளிகளுக்கு போதுமான மருத்துவ வசதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லை.

    அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தை போதுமான மருத்துவ வசதிகளுடன் அரசு மருத்துவமனையாக செயல்படுத்திட சுகாதார துறையும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×