என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டெங்கு விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்26 Sept 2023 1:45 PM IST
- முதுகுளத்தூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- வீடுகளில் பயன்படாமல் கிடக்கும் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பயிற்சி நிலைய முதல்வர் வாளையானந்தம் தலைமை தாங்கினார். கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நெப்போலியன் முன்னிலை வகித்தார். இதில், டெங்கு கொசுக்கள் உருவாகும் விதம், டெங்குவால் ஏற்படும் ஆபத்துக்கள், காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வீடுகளில் பயன்படாமல் கிடக்கும் பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள், ஆசிரியர்கள், கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, கருணாகர சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×