search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை
    X

    ராமநாதபுரம் கோ-ஆப்டெக்சில் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையை கலெக்டர் விஷ்ணுசந்திரன் இன்று காலை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

    கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை

    • கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    • கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்கம் கைத்தறி ரகங்க ளின் விற்பனையை அதிக ரிக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுப டியை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் ராமநாத புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்தி ரன் இன்று காலை குத்து விளக்கேற்றி முதல் விற்ப னையை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.21.59 லட்சம் ஆகும். இந்த ஆண்டு (2023) தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். இந்த விழா வில் வர்த்தக மேலாளர் கே.சங்கர், மேலாளர் ஆர்.மோகன்குமார், விற்பனையாளர் ஆர்.பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக ஆர்கானிக் புடவை ரகங்கள், காஞ்சீபுரம் பட்டு, சேலம் பட்டு, திருப்பு வனம் பட்டு, கோவை மென்பட்டு, கண்டாங்கி சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், திண்டுக்கல், அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், சுடிதார் ரகங் கள், நைட்டிகள், குர்த்தீஸ்கள் கண்ணை கவரும் வண்ணங் களில் வாடிக்கையாளர்க ளுக்கான கொண்டு வரப்பட் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×