search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. சாா்பில் திராவிட மாடல் பயிற்சிக் கூட்டம்
    X

    கூட்டத்தில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் பேசினார். அருகில் திருச்சி சிவா எம்.பி., செய்தி தொடர்பு துணை செயலாளர் ராஜீவ் காந்தி உள்ளனர்.

    தி.மு.க. சாா்பில் திராவிட மாடல் பயிற்சிக் கூட்டம்

    • தி.மு.க. சாா்பில் திராவிட மாடல் பயிற்சிக் கூட்டம் நடந்தது.
    • அடித்தட்டு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தனி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சாா்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டம் பட்டினம் காத்தான் தனியார் மகாலில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பாரகு முன்னிலை வகித்தாா்.

    சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., செய்தி தொடர்பு துணை செயலாளர் ராஜீவ் காந்தி கலந்து கொண்டனர்.

    திருச்சி சிவா எம்.பி. பேசுகையில், தமிழகத்தில் அடித்தள மக்களின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திராவிடர் கழகம். அதன் பரிணாம வளா்ச்சியால் உருவானதே தி.மு.க.. அது அனைத்துத் தரப்பினரின் நலனையும், உரிமையையும் காக்கும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தனி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா்.

    திராவிட கொள்கைகளை இளம் தலைமுறையினா் அறிந்து கொள்வது அவசியம். அப்போது தான் நமது உரிமையை நிலை நாட்ட முடியும் என்றாா்.

    பரமக்குடி சட்டமன்ற உறுப்பினா் முருகேசன், முன்னாள் அமைச்சா்கள் சுந்தரராஜன், சத்தியமூா்த்தி, இலக்கிய அணி துணைத் தலைவா் பெருநாழி போஸ், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், மாணவரணி அமைப்பாளர் இப்திகார் அஹமது, கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×