search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பேரணி
    X

    குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பேரணியை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார்.

    குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பேரணி

    • ராமநாதபுரத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது.
    • இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைக்கான விழிப்பு ணர்வு வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை (நவீன வாசக்டமி) வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சைக்கான சிறப்பு முகாம் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி வரை அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகின்றன.

    இம்முகாமில் ஆண்க ளுக்கான குடும்பநல அறுவை (நவீன வாசக்டமி) சிகிச்சை வழங்கப்படுகிறது. இதுவரை தற்காலிக மற்றும் நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் உயர்வரிசை குழந்தை பட்டியலில் ஏராளமான தாய்மார்கள் உள்ளனர். சிலருக்கு குடும்பநல அறுவை சிகிச்சை ஏற்று கொள்ள முடியாத வகையில் உடல்நிலை பிரச்சினைகள் இருக்கும். இதனால் 49 வயது வரை குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

    இப்படிப்பட்ட நிலையில் மருத்துவ சிக்கல் ஏற்பட்டு பிரசவத்தின்போது உயிர் இழக்கும் ஆபத்து ஏற்படு கின்றன. இதை தவிர்த்திடும் வகையில் ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படு வதுடன் இத்தகைய சிறப்பு முகாம் தற்பொழுது நடை பெற்று வருகிறது. தகுதி யானவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் சிவானந்தவல்லி, இணை இயக்குநர் சகாய ஸ்டீபன் ராஜ், அலுவலக கண்கா ணிப்பாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திலீப்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×