search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருத்தி விலை குறைவால் பறிக்க ஆர்வம் காட்டாத விவசாயிகள்
    X

    பருத்தி விலை குறைவால் பறிக்க ஆர்வம் காட்டாத விவசாயிகள்

    • அபிராமம் பகுதியில் பருத்தி விலை குறைவால் அதனை பறிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம். திருப்புல்லாணி, நயினார் கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம் ஆகிய பகுதிகளில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக பருத்தி விவசாயம் செய்யப்படுகிறது.

    பருத்தி பணப்பயிர் என்பதால் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்தி விலை குறைந்துவிட்டது.

    அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் போதிய மழை இல்லாததால் பருத்தியில் கொண்டை புழு பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்து வரும் நிலையில் பருத்தி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போதிய விளைச்சலும் இல்லை. கமிஷன் கடை களில் பருத்தி ஒரு கிலோ ரூ.38-க்கு விற்கப்படுகிறது. விலை குறைவால் விவசாயி கள் கவலை அடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, அபிராமம் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செடியில் இருந்து பருத்தி பறிப்பதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பருத்தி செடி வீணாகும் நிலை உள்ளது.

    இது பற்றி அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதா வது:-

    கடந்த ஆண்டு பருவமழை இல்லததால் நெல் விவசா யம் பாதிக்கப்பட்டதுடன் மிகப்பெரிய பொருளாதார கஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பருத்தியில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் பருத்தி விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×