search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன் கடைகள் திறக்காமல் இழுத்தடிப்பு
    X

    மீன்கடைகள் திறக்கப்படாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.

    மீன் கடைகள் திறக்காமல் இழுத்தடிப்பு

    • மீன் கடைகள் திறக்காமல் இழுத்தடிப்பட்டு வருகிறது.
    • அரசு நிதி ரூ.12 லட்சம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள பெருமாள் கோவில் எதிரில் மெயின் ரோட்டோரம் தினமும் மீன் விற்பனை நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஊராட்சி சார்பில் 2019-ந் ஆண்டில் ரூ.12 லட்சத்தில் மீன்கள் விற்பனை செய்வதற்காக 10 கடைகள் கட்டப்பட்டது. இங்கு குடிநீர், மின்சார வசதி இல்லாததால் வியாபாரிகள் இந்த கடைகளை பயன்படுத்த ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து ரோட்டோரத்தில் விற்பனை செய்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த வழியாக செல்லும் போது முகம் சுளித்து செல்கின்றனர். 2 ஆண்டுகளாக கடை கள் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.இரவு நேரத்தில் மது அருந்தும் பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் கடைகள் மாறி உள்ளன.

    எதிரில் உள்ள இடத்தில் மது பாட்டில்கள், பாலிதீன் குப்பைகள் குவிந்துள்ளது. இதனால் அரசு நிதி ரூ.12 லட்சம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மின்சாரம், குடிநீர் வசதி ஏற்படுத்தி கடைகளை புதுப்பித்து, குப்பையை அகற்றி சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×