என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுகாதார ஆய்வாளரிடம் ரூ.80 ஆயிரம் நூதன மோசடி
- சுகாதார ஆய்வாளரிடம் ரூ.80 ஆயிரம் நூதன முறையில் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
- அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே வட்டான் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் டெண்டுல்கர் (வயது 24). இவர் உச்சிப்புளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி ஒரு மொபைல் எண்ணில் இருந்து அவர் சம்பள வரவு, செலவு வைத்திருக்கும் வங்கி கணக்கில் பான் கார்டு பதிவு செய்யாமல் இருப்பதினால், வங்கி கணக்கினை நிறுத்தம் செய்ய போவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனை பார்த்த சச்சின் டெண்டுல்கர் அதனுடன் வந்த அப்டேட் செய்ய கொடுக்கப்பட்ட லிங்கை இணைபபு செய்து, அதில் கேட்கப்பட்ட சுய விபரம் மற்றும் ஓ.டி.பி. எண்ணினை தொடர்ந்து 3 முறை பதிவு செய்தார்.
இதையடுத்து அடுத்த அவரது வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து ரூ.79 ஆயிரத்து 998 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி ராமநாதபுரம் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.