search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு
    X

    போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு

    • ராமநாதபுரத்தில் போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.
    • பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது. இதன் வாயிலாக பல்வேறு வகையான போட்டி தேர்வு களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யத்தால் வெளியிடப் பட்டுள்ள சார்பு ஆய்வாளர் (Sub-Inspectors of Police (Taluk, Armed Reserve, TSP & Station Officer 2023) பணிக்காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 743 பணிக்காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 1.7.2023 தேதியில் குறைந்த பட்சம் 20 வயது அதிகபட்சம் பொதுப் போட்டியினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையிலும், பட்டியல் மற்றும் பழங்கு டியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்க ளுக்கு 47 வயது வரையிலும் இருக்க வேண்டும்.

    இந்த தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகட்டணம் ரூ.500 ஆகும்.

    இப்போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

    இதில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அலுவலக தொலைபேசி எண் 04567-230160 மூலமாகவோ, 78670 80168 என்ற அலைபேசிக்கு வாட்ஸ்-அப் வாயிலாக வோ, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொண்டு இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×