search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசின் திட்டங்கள் உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும்
    X

    அரசின் திட்டங்கள் உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும்

    • அரசின் திட்டங்கள் உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழில்துறை ஆணையர் வலியுறுத்தினார்.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழில் துறை ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட த்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை வாரியாக அலுவலர்களுடன் ஆய்வு நடந்தது.

    மேலும் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை களின் சார்பில் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்கப் பட்டது. ஒவ்வொரு துறை யிலும் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் அந்தந்த ஆண்டிலேயே முடிக்க வேண்டும். அது மட்டுமின்றி பொதுமக்களுக்கு உரிய காலத்தில் அரசின் திட்டங்கள் சென்றால்தான் அதன் பயன் அவர்களுக்கு முழுமையாக கிடைத்திட முடியும் என்பதை அறிந்து அந்தந்த துறைகள் செயல்படுவதுடன் திட்டங்கள் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தொழில்துறை ஆணையர் அர்ச்சனா அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    முன்னதாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் குயவன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் காலை உணவு திட்டத்தின் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் தோட்டக்க லைத்துறையின் மூலம் சுந்த ரமுடையான் ஊராட்சியில் பராமரிக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையினையும், நொச்சி ஊரணியில் உள்ள நாற்றங்கால் பண்ணை யினையும் பார்வையிட்டார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன் அவர்கள், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் அவர்கள், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×