search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை
    X

    ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

    • ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுவதுடன் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ள–னர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மூலக் கொத்தளம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த–வர் தங்கமணி (வயது 62). இவர் கூட்டுறவு வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 28-ந்தேதி பெங்களூ–ரில் உள்ள மகன்கள் வீட் டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து கைவரிசையை காட்டி உள்ளனர்.

    இவரது வீட்டை ராமநா–தபுரம் அருகே புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த அம்மாசி என்பவர் மனைவி பஞ்ச–வர்ணம் (55) என்பவர் பரா–மரித்து வந்துள்ளார். இந்த நிலையில் பஞ்சவர்ணம் நேற்று முன்தினம் காலை–யில் வீட்டை சுத்தம் செய்வ–தற்காக சென்றபோது அங்கு முன்வாசல் கதவு உடைக் கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து உடனடியாக ராமநாதபுரம் பஜார் போலீ–சாருக்கு தகவல் தெரிவித் தார். அதன்பேரில் போலீ–சார் விரைந்து வந்தனர். இதற்கிடையே பெங்களூர் சென்ற ஓய்வு பெற்ற அதி–காரி தங்கமணி ராமநாதபு–ரத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்த போது வீட்டுக்குள் இருந்த 51 பவுன் நகை, ரொக்க பணம் ரூ.40 ஆயிரம், வெள்ளி பொருட் கள் கொள்ளை போயிருப் பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்க–துரை உத்தரவின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீ–சார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வரு–கின்றனர். நேற்று மோப்ப–நாய், கைரேகை நிபுணர்கள் திருடு போன வீடுகளுக்கு சென்றும் எவ்வித முன்னேற் றமும் இல்லை. அதேபோல் இவரது வீட்டிற்கு நீண்ட தூரத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத் தப்பட்டிருப்பதால் திருடர் களை அடையாளம் கண்டு–பிடிப்பது போலீச ருக்கு பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும் திருடர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்க ப்பட்டு தீவிரமாக தேடுவ துடன் கண்காணிப்பு பணியி லும் ஈடுபட்டுள்ள–னர்.

    Next Story
    ×