என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடலாடி யூனியன் கூட்டம்
- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் யூனியன் கூட்டம் நடந்தது.
- கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் தெரிவித்தார்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் ஆத்தி, முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், ஆணையாளர் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா. கவுன்சிலர்கள் குமரையா, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
இதில் கவுன்சிலர் பார்வதி பேசுகையில், மேலக் கிடாரம் கிராமத்தில் கண்மாய் கரையை சேதப் படுத்தியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஆணையாளர் கண்மாய் கரையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.
கவுன்சிலர் மாய கிருஷ்ணன் பேசுகையில், ஓரிவயலுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளை சரி செய்ய நிதி ஒதுக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் ஜெயச்ச ந்திரன் பேசுகையில், மீனங்குடி, கருங்குளம் கடுகு சந்தை ஆகிய ஊராட்சிகளில் உள்ள தெருக்களுக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனங்குடி கிராமத்தில் இருந்து அம்மன் கோவில் செல்லும் சாலையை மெட்டல் சாலையாக அமைக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் அம்மாவாசி:- சிக்கல் பாண்டியன் ஊரணியை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். கவுன்சிலர் காதர் சுல்தான் அலி:- வாலிநோக்கம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் பிச்சை:- ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும். கவுன்சிலர் பைரோஸ் பானு ஜலில்:- ஒப்பிலான் கிராமத்தில் இருந்து செல்லும் கடற்கரை சாலை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பனையூர் கிராம பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் வசந்தா கதிரேசன்:- மாரியூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெறவில்லை. மக்களின் அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் ராஜே ந்திரன்:- வாலிநோக்கம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உசவன் குளம் கிராமத்தில் இருந்து வாலிநோக்கம் செல்லும் சாலையை தார்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜர்புரம் சாலை முதல் ராஜாக்கள் பாளையம் வரை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்