search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேருராட்சி மன்றக்கூட்டம்
    X

    முதுகுளத்தூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் ஷாஜஹான் தலைமையில் நடந்தது.

    பேருராட்சி மன்றக்கூட்டம்

    • முதுகுளத்தூர் பேருராட்சி மன்றக்கூட்டம் நடந்தது.
    • கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.5 கோடி நிதிஉதவி கேட்கப்பட்டுள்ளது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரு ராட்சி மன்றக்கூட்டம் பேரூராட்சி தலைவர் ஏ.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலை வகித்தார். ராஜேஷ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கவுன்சிலர் மோகன்தாஸ்:-

    தி.மு.க. 7-வது வார்டு வீடு கட்டுபவர்கள் சன்சைடு மற்றும் வாசல்படிகளை ரோட்டில் கட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் பேரூராட்சி சார்பில் சர்வேயர் நியமிக்க வேண்டும்.

    தலைவர் ஷாஜகான்:- சர்வேயர் நியமிக்க நடவடிக்கை நிலையில் தற்போது கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமித்து சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உம்முகர்தா (தி.மு.க.):-

    கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தவுடன் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையேல் மீண்டும் கால்வாயிலே கோழிகளால் கொத்தி தள்ளிவிடப்படுகிறது.

    தலைவர் ஷாஜகான்:-

    4 கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமித்து கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சுந்தரம்பாள் (தி.மு.க.):- கழிவுநீர் தேங்குவதை தடுக்க ஜே.சி.பி. மூலம் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

    தலைவர் ஷாஜகான்:-

    15-வது வார்டில்தான் ஜே.சி.பி. எந்திரம் மூலம் வேலை நடந்து வருகிறது. அதனை நேரில் பார்வையிட்டு வேலை சிறப்பாக நடக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன் மூலம் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.5 கோடி நிதிஉதவி கேட்கப்பட்டுள்ளது.

    மோகன்தாஸ் (தி.மு.க.):-

    தினசரி மார்க்கெட்டில் ஏலம் விடாமல் நிறுத்தப் பட்டால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.தலைவர் ஷாஜகான்:-

    இது தொடர்பாக டி.எஸ்.பி. மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவகம் மூலம் மனுக்கள் வந்துள்ளன. தினசரி சந்தை ஏலம் விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மீன் மார்க்கெட் கழிப்பறை ஏலம் விடுவதும் நிறுத்தப்பட உள்ளன.

    தமிழகம் முழுவதும் கழிப்பறைகளில் ரூ.5 கட்டணமாக வாங்கும் நிலை இருந்தும், முதுகுளத்தூரில் ரூ.16 வசூலிக்கப்படுகிறது.

    எனவே கட்டணம் நிர்ணயம் செய்தபின் ஏலம் விடப்படும்.

    இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

    முடிவில் முனியசாமி நன்று கூறினார்.

    Next Story
    ×