search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.29.21 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள் அமைப்பு
    X

    புதிய மின்மாற்றியை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

    ரூ.29.21 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள் அமைப்பு

    • கமுதி, கடலாடி வட்டங்களில் ரூ.29.21 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • இதனை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் கடலாடி வட்டங்களில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி புதிய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற் காக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கமுதி வட்டம் கோட்டை மேடு பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்ததை யொட்டி அங்கு ரூ.7 லட்சத்து 63 ஆயிரத்து 105 மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப் பட்டு செயல்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட் டுள்ளது.

    இதன் மூலம் 142 வீடுகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும். அதே போல் கீழவலசை பகுதி யிலும் ரூ.12 லட்சத்து 600 மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் 82 வீடுகள் மற்றும் விவசாய மின் மோட்டார்கள் தடை யின்றி செயல்பட பயனுள்ளதாக இருக்கும்.

    கடலாடி வட்டம், கீழச்செல்வனூர் ஊராட்சியில் ரூ.9 லட்சத்து 58 ஆயிரத்து 80 மதிப்பீட்டில் மின்மாற்றி அமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. இங்கு 56 வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு மின்மோட்டார்கள் தடையின்றி செயல்பட பயனுள்ளதாக இருக்கும்.

    இதே போல் பொது மக்களின் தேவைக்கேற்ப மின்மாற்றிகள் பல்வேறு கிராம பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி மக்களின் தேவையை அறிந்து சாலை வசதி, பஸ் வசதி, குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, மின் பகிர்மான கழக கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் ரெஜினா, உதவி பொறியாளர்கள் சாதிக், விஜயா, முகமது இப்ராகிம், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×