என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை
- வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- வருகின்ற வருகிற 30-ந் தேதிக்குள் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் அல்லது tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ செலுத்தலாம் என்றும் கூறினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கீழக்கரை நகர் பொது மக்களின் தேவைக்காக குடிநீர் வசதி, வடிகால் வசதி, சாலை வசதி, கழிவுநீர் சுத்தகரிப்பு, தெருவிளக்கு பராமரிப்பு போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை கீழக்கரை நகராட்சி மேற்கொண்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட குடி யிருப்பு கட்டிடங்கள், வணிக கட்டிடங்களின் உரிமையாளர்கள் சிலர் செலுத்த வேண்டிய வரி இனங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தினால், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நிதியாண்டில் முதல் அரையாண்டு முடிவடைய குறுகிய காலங்களே உள்ள நிலையில் இதுவரை சொத்து வரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றப்படுவதற்கான கட்டணங்கள் ஆகியவைக்கான மொத்த கேட்பு தொகை ரூ.3 கோடியே 39 லட்சத்து 37ஆயிரம். அதில் இதுவரை 45 லட்சத்து 3 ஆயிரம் மட்டுமே வசூ லிக்கப்பட்டுள்ளது.
சிலர் செலுத்த வேண்டிய வரியினங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தினால், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வோடு செயல்பட்டு தங்களது வரி இனங்களை வருகின்ற வருகிற 30-ந் தேதிக்குள் கீழக்கரை நகராட்சி அலுவலகத்திலோ அல்லது tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ நிலுவையின்றி தங்களது வரிகளை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, ஜப்தி நடவடிக்கையினை தவிர்த்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.