என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொறியியல் கல்லூரி வளாகத்தில் உண்டு உறைவிடப்பள்ளி
- பொறியியல் கல்லூரி வளாகத்தில் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படத் தொடங்கும் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தார்.
- வரும் கல்வியாண்டு முதல் 6 -ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட த்தில் உண்டு உறைவிட பள்ளிக்கு தற்காலிக மாக செய்யது அம்மாள் பொறி யியல் கல்லுாரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கு ஓரிரு வாரத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க உள்ளது. தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளை (மாதிரிபள்ளிகள்) தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் உண்டு உறைவிட பள்ளிக்கு அரசு கட்டடங்கள் இல்லாததால் தனியார் இடத்தில் வாடகை அடிப்படையில் பள்ளியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதன்படி ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விடுதி அறைகள், உண்டு உறைவிட பள்ளிக்குரிய வகுப்பறைகள் அமைக்கும் பணி நடக்கிறது.
முதல் கட்டமாக பிளஸ் -2 வகுப்புகளில் ஆங்கில வழி வகுப்புக்கு 40 பேரும், தமிழ் வழி வகுப்புக்கு 40 பேரும் என 80 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். ஓரிரு வாரங்களில் பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளதாக வும், வரும் கல்வியாண்டு முதல் 6 -ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரையில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.