என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை இயக்க வேண்டும்
- 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், மேல்பனையூர் பாலம் அருகே உள்ளது ஆயிரவேலி கிராமம். இங்கு ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மேல்பனையூர், கீழ்பனையூர், ஆயிரவேலி, நடுவக்குடி, குமரங்காலி ஆகிய கிராமங்கள் வழியாக திருவெற்றியூர் கிராமத்திற்குச் செல்லும் மாணவ-மாணவிகள், வயதா னோர் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக டவுன் பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
இந்த பஸ் இயக்கப்படும் சாலையில் மேல்பனையூர் சாலை மட்டும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கீழ்பனையூர், ஆயிரவேலி கிராமங்களில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலைவசதி இல்லாத, பழுதடைந்த சாலைகளில் எத்தனையோ பஸ்கள் இயக்கப்படும் நிலையில், சாலை வசதி உள்ள கிராமங்களுக்கு டவுன்பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று இந்தப்பகுதி கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.