search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய உணவு திருவிழா
    X

    கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நடந்த பாரம்பரிய உணவு திருவிழாவில் கல்லூரி முதல்வர் சுமையா பேசினார்.

    பாரம்பரிய உணவு திருவிழா

    • தாசிம்பீவி மகளிர் கல்லுாரியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
    • சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கீழக்கரை

    கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம், கிரியேட் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், உணவு பாதுகாப்புத் துறை, இயற்கை வேளாண் கூட்டமைப்பு இணைந்து நடத்திய பாரம்பரிய உணவு திருவிழா கல்லூரி முதல்வர் சுமையா தலைமையில் நடைபெற்றது, கல்லூரி ஊட்டச்சத்து துறை தலைவர் முத்துமாரி ஈஸ்வரி வரவேற்றார்.

    நஞ்சில்லா இயற்கை உணவு பற்றியும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கமாக பாரம்பரிய பண்பாட்டு உணவில் உள்ள மருத்துவ குணங்கள், ஊட்டச் சத்துக்கள் மற்றும்சமைக்கும் செயல்முறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டி கல்லூரி மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப் பட்டது. அதில் கேழ்வரகு மிக்ஸர், கேழ்வரகு கூழ், வரகு டோங்கா, உளுந்து களி போன்ற வித விதமான பாரம்பரிய உணவுகளைத் தயாரித்து அசத்தினர். சிறந்த உணவு தயார் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்புல்லாணி ஒருங்கிணைந்த குழந்தைகள்வளர்ச்சித் திட்டம் சார்பில் சிறு குறு தானியங்களில் திண்பண்ட சத்துப்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டது.

    கிரியேட் தொண்டு நிறுவன தலைவர் துரைசிங்கம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை டாக்டர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் நாராயணன், திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அமர்லால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் கலா, கீழக்கரை நுகர்வோர் நலச் சங்க செயலாளர் செய்யது இப்ராஹிம், பாக்கர் அலி, இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கிரியேட் திட்ட இயக்குனர் சுரேஷ் கண்ணா நன்றி கூறினார். ஏராளமான கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் அல்ஹாஜ் சேக் தாவூத் கான், துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    Next Story
    ×