search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை பிரச்சினை படிப்படியாக தீர்க்கப்படும்-நகரசபை தலைவர் உறுதி
    X

    ராமநாதபுரம் நகராட்சி 22-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணிகளை நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் பார்வையிட்டார்.

    பாதாள சாக்கடை பிரச்சினை படிப்படியாக தீர்க்கப்படும்-நகரசபை தலைவர் உறுதி

    • ராமநாதபுரம் நகராட்சி 22-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணிகளை நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் பார்வையிட்டார்.
    • பாதாள சாக்கடை பிரச்சனை படிப்படியாக சரி செய்யப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட 22-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொண்டு சரி செய்யும் பணிகளை நகர சபை தலைவர் ஆர்.கே கார்மேகம் பார்வையிட்டார். அப்போது அவர் மாலைமலர் நிரு பருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின் படி ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் குறிப்பாக ராமநாத புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்சனை தொடர்ந்து வருகிறது.இது சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரில் அவ்வப்போது நானே நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். வார்டு கவுன் சிலர்களின் கோரிக்கை களை ஏற்றும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

    குறிப்பாக கடந்த கால ஆட்சியில் ஏற்பட்ட ஒரு சில குளறுபடிகளால் நகரின் பிரதான பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது.காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ மூலம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வு காண ஆவண செய்து வருகிறோம்.இதற்கிடையில் பொது மக்கள் நலன் கருதி அவர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நேரில் சென்று ஆய்வு செய்து தீர்வு கண்டு வருகிறோம்.பொதுமக்களுக்கான திராவிட மாடல் ஆட்சியில் ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை பிரச்சனை படிப்படியாக சரி செய்யப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×