search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழுதூர் முத்துவேலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    வழுதூர் முத்துவேலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • வழுதூர் முத்துவேலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி பூரணவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான முத்துவேலம்மன், ஆண்டி ஐயா ஆகிய பரிபால தெய்வங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலை பூஜை, கோமாதா பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி நடைபெற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டது. புனிதநீர் குடங்களை வேத விற்பன்னர்கள் சுமந்து கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். கருடபகவான் வானத்தில் வட்டமிட பெண்கள் குலவை முழக்கத்துடன் முத்துவேல் அம்மன் மற்றும் ஆண்டி அய்யா, நாகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோபுர கலசத்தில் திருப்புல்லாணி பாபு சாஸ்திரி குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். மூலவருக்கு நடந்த சிறப்பு அபிஷேகம், தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமியை தரிசனம் செய்தனர்.

    அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை காண வழுதூர், வாலாந்தரவை, தெற்கு காட்டூர், உடைச்சியார் வலசை, ஏந்தல், மொட்டையன் வலசை, அளம், பட்டணம் காத்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கோவில் நிர்வாகிகள் ராஜகோபால், செல்வம், கார்மேகம், தினகரன், ஜோதி, நந்தகுமார் மற்றும் வழுதூர் கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பி.டி.ராஜா,

    எம். கே.பாலு, துரை, ஜெயபால், சிவசாமி, குணசேகரன், மோகன், தரணி முருகேசன், வாலாந்தரவை ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி பூரணவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×