என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மகளிர் உரிமைத் தொகை முகாம் நடைபெறும் இடம்
- மகளிர் உரிமைத் தொகை முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளி களை தேர்வு செய்வதற்காக முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. இதற்காக மொத்தம் உள்ள 775 நியாய விலை கடைகளில் முதற் கட்டமாக 326 நியாய விலை கடைகளில் வருகிற 24-ந் தேதி முதல் ஆக.4-ந் தேதி வரையும், 2-ம் கட்டமாக 449 நியாயவிலை கடைகளில் ஆக.5 முதல் 16 வரையும் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெற வுள்ளன.
இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் குறிப்பாக இன்டர்நெட் வசதி, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை வசதி, மின் இணைப்பு வசதி, கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வட்டவாரியாக குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.இந்த நிலையில் மூலக்கொத்தளம் மேல்நிலைப்பள்ளி முகாமில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். முன்னதாக ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் புதிய பஸ் நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களுக்கான பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது, காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சர்மா, நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.டி.பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் அஜீதா பர்வீன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.