search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • விதிகள் மீறி செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து விளக்கம்
    • 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணம் செய்யக்கூடாது

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சித்தூர் செல்லும் சாலை அருகே உள்ள அரசு நிதியுதவி மேல்நிலைப் பயிலும் மாணவர்களுக்கு, காவல்துறை சார்பில் பள்ளியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, சோளிங்கர் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி தலைமை தாங்கினார்.

    மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், வீடு மற்றும் பள்ளி அருகே போதைப்பொருள் விற்பனை செய்வது தெரிய வந்தால், அதுகுறித்து காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பாலியல் வன்கொடுமை குறித்தும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணம் செய்யக்கூடாது.

    விதிகள் மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி காவல்துறை சார்பில் எடுக்கப்படும் தண்டனைகள் குறித்து விளக்கப்பட்டது. இதில், உதவி காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் எப்சிபா கேத்ரின் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • 2 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை, சிப்காட் அடுத்த கொண்ட குப்பம் கிராமம்,சிலோன் காலனி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வர்கள் ரவிகுமார் (42), மணிகண்டன்(40).

    இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு பள்ளேரி- வசூர் சாலையில் பொன்னை ஆற்று பாசன கால்வாய் பாலத்தில் அமர்ந்து மது குடித்தாக தெரிகிறது.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் ரவிக்குமார் மற்றும் மணிகண்டனை தாக்கிவிட்டு ரவிக்குமார் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் பணம், மற்றும் 2 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

    இதில் ரவிக்குமார் காயம் அடைந்தார். பூட்டுதாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    • திருமணமாகி மகன், மகள் உள்ளனர்
    • மின்விசிறியில் பிணமாக தொங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30) இவர் திருவலம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோத் குமார் புடவையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • தலா ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது
    • பொக்லைன் எந்திரம் பறிமுதல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே பஸ்களில் ஏர் ஹாரன் பொருத்தப்ப ட்டுள்ளதா என வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை திடீர் ஆய்வு செய்தனர்.

    தனியார் மற்றும் அரசு பஸ்கள் என மொத்தம் 25 பஸ்களில் சோதனை யிட்டனர்.

    இதில் 4 பஸ்களுக்கு தலா ரூ.10ஆயிரம் வீதம் ரூ.40ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் 13 பஸ்களில் இருந்து ஏர் ஹாரன் குழாய் அகற்றப்பட்டது. பஸ் டிரைவர்களிடம் மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டு இருந்தால் ஓட்டுனர் உரிமம் 3மாதம் நிறுத்திவைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்க ப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் ஒரு வருடம் வரி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கடைகளுக்குc
    • போலீசார் சோதனையில் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்படி, மாவட்டம் முழுவதிலும் அரசால் தடை செய்யப்பட்ட போதை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நேற்று கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையின் போது அரக்கோணம், வாலாஜா, சேந்தமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள கடைகளிலிருந்து மொத்தம் 81 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட வர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வருவாய்த்து றையினர் மூலம் கடைக ளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

    • சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்
    • செலவினங்களை மதிப்பீடு செய்வது குறித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது

    காவேரிப்பாக்கம்:

    பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.

    பேரூராட்சித் தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

    மேலும் அரக்கோணம்-ஒச்சேரி செல்லும் சாலை 4 வழிச்சா லையாக விரிவாக்கம் செய்ய உள்ளதால் பனப்பாக்கம் பேரூராட்சி வழியே செல்லும் குடிநீர் குழாய்களை இடம் மாற்றியமைக்க ஆகும் செலவினங்களை மதிப்பீடு செய்வதுகுறித்தும் தீர்மானம் இயற்றப்பட்டது.

    மழைக்காலம் என்பதால் அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதில் இளநிலை உதவி யாளர் மோகனகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • விபத்துகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை
    • சாலை விபத்துகளில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்

    கலவை:

    சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை ஆற்காடு டவுன் சந்திப்பில் புதிய ரவுண்டானா, தேசிய நெடுஞ்சாலைதுறையால் கட்டப்பட்டு வருகிறது.

    நெடுஞ்சாலையின் சந்திப்பு அருகே அடிக்கடி விபத்துகள் நடப்பதால் புதிய ரவுண்டானா அவசியமாக உள்ளது

    திட்டத்தின் ஒரு பகுதியாக, நெடுஞ்சாலை மற்றும் ஆற்காடு டவுனுக்கு செல்லும் பிரதான பாதையின் மையத்தில் சுமார் 1,500 சதுர அடியில் ரவுண்டானா அமைக்கப்படுகிறது.இதில் 1.5 மீட்டர் உயரத்திற்கு வேலி அமைக்கப்படும்.

    சுற்றுபகுதியில் நாட்டு மரக்கன்றுகள் நடப்படும். மேலும் மிளிரும் விளக்குகள், பிரதிபலிப்பான்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படும்.நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை, குறிப்பாக சென்னையில் இருந்து, ஆற்காடு சந்திப்புக்கு அருகில் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

    போக்குவரத்து ஒழுங்குமுறை

    சாலையோர மின் விளக்குகள் முதல் அனைத்து மின் இணைப்புகளும் சரிபார்க்கப்படும். உடைந்த கான்கிரீட் நடைபாதைகள் மீண்டும் அமைக்கப்படும்.

    இதனால் சென்னையை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் முன்பு போல் ஆற்காடு நகருக்குள் நேரடியாக செல்ல வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, பாலாற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் வழியாக செல்ல முடியும்.

    இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த ஜனவரி மாதம் முதல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதிவான சாலை விபத்துகளில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் 96 பேர் மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் பகுதிகளில் இறந்துள்ளனர். 14 பேர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். பெரும்பாலும் பைக்குகளில் செல்பவர்கள் மற்றும் சாலையோரமாக நடந்து செல்பவர்கள் அதிகமாக இறந்துள்ளனர்.

    தற்போது ரவுண்டானா அமையும் ஆற்காடு சந்திப்பு, மாவட்ட போலீஸாரால், விபத்து அதிகம் ஏற்படும் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இந்த நெடுஞ்சாலையில் அமைய உள்ள புதிய ரவுண்டானா, டவுனில் இருந்து பைக் ஓட்டுபவர்கள் உட்பட அனைத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்றனர்.

    • உரிமையாளர் கைது
    • போலீசார் சோதனையில் சிக்கினர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஆற்காடு பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது பஸ் நிலையம் அருகே கண்ணன் பூங்கா எதிரில் உள்ள பெட்டி கடையில் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து ஆற்காடு தாசில்தார் வசந்தி மற்றும் வருவாய் அதிகாரிகள் உதவியுடன் கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடை உரிமையாளர் ஆற்காடு ஆசாத் தெருவை சேர்ந்த தேவராஜ் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்
    • 1.5 கிலோ பாக்கெட்டுகள் பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என நெமிலி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நெமிலிக்கு செல்லும் சாலையில் உள்ள கடை ஒன்றில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து 1.5 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் செந்தில்குமார் (வயது 55) என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் குட்கா விற்ற கடையை வருவாய் ஆய்வாளர் பிள்ளையார் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது நெமிலி சப்- இன்ஸ்பெக்டர் லோகேஷ், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தபோது விபரீதம்
    • கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி அருகே உள்ள வேப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. விவசாயி, இவர் தனது பசுமாட்டை அருகிலுள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார்.

    இந்நிலையில் சிறிது நேரம் கழித்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பலத்த சத்தத்துடன் இடி பசுமாட்டின் மீது விழுந்ததில் மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த் துறையினர் பார்வையிட்டனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் பசுமாட்டை பரிசோதனை செய்தனர்.

    • ரெயில் பயணிகள் சங்கம் எச்சரிக்கை
    • நடைமேடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயிலில் செல்லும் பயணிகளிடம் இருந்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடக்கிறது.

    இது குறித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவர் மற்றும் தெற்கு ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினருமான நைனா மாசிலாமணி கூறியதாவது:-

    அரக்கோணம் ரெயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வேலைக்கும், மாணவர்கள் பள்ளி,கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர்

    6-வது மற்றும் 7-வது பிளாட்பாரத்தில் அரக்கோணத்தில் இருந்து தக்கோலம், திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றது. இதே போல் சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரும் மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    அரக்கோணம் - தக்காலம் ரெயில் நிலையத்துக்கு இடையே பெண்களை குறி வைத்து கத்தியால் தாக்கி நகை, பணத்தை கொள்ளை அடிப்பதும் வழக்கமாக உள்ளது.

    இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளித்தும். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. நேற்றும் வயதான மூதாட்டி ஒருவரை கத்தியால் வெட்டி பணம், நகையை கொள்ளை யடித்துள்ளனர்

    இந்த சம்பவம் அதிர்ச்சியும்,வேதனையும் அளிக்கிறது.

    இந்த சம்பவத்தில் இதுவரை கொள்ளையனை பிடிக்கவில்லை. இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவர்களின் உடமை களுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் பணியில் இருக்கும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரெயில் நிலையத்தில் இயங்கும் ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. இதை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

    அரக்கோணம் பயணிகள் சங்கம் சார்பாக, சங்க உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஏற்கனவே 6, 7-வது நடைமேடைகளில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கண்காணிப்பு கேமரா அமைத்திருந்தால் கொள்ளையர்கள் பிடித்திருக்கலாம். எதையும் செய்யாமல் மெத்தன போக்கை ரெயில்வே துறை பின்பற்றி வருகிறது.

    எனவே இதை அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கி றோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை விரைவில் பிடிக்க வேண்டும்.

    இந்த போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் அரக்கோணம் ரெயில்வே அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அசம்பாவிதங்களை தடுத்திட போக்குவரத்துக்கு தடை
    • மின்கம்பம், மின் கம்பிகளை போலீசார் அகற்றினர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் சென்னை பெங்களூர் அதிவிரை வுச்சாலை பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன இதற்கான சாலை போடும் பணியில் அதிக அளவில் வட மாநில தொழிலாளா்கள் ஈடு படுத்தப்பட்டு வருகின்றனா்.

    இந்நிலையில் சாலை போடுவதற்காகா நாள் ஒன்றுக்கு 500 -க்கும் மேற்ப்பட்ட டிப்பா் லாரிகளில் மண் கொண்டு வந்து நிரப்பி வருகின்றனா்.

    நேற்று மாலை 6.30 மணியளவில் வழக்கம் போல் மண்ணை கொட்டிவிட்ட வந்த டிப்பா் லாரி லாரியின் பின் பகுதியை கீழே இறக்காமல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே பாணாவரம் - காவேரி ப்பாக்கம் சாலையில், சாலை ஓரம் இருந்த மின் ஒயர்களை லாரியின் பின் பக்க பகுதி இழுத்து வந்துள்ளது. இதனால் அருகில் இருந்த மின் கம்பம் தூக்கி வீசப்பட்டு பாணாவரம் - காவே ரிப்பாக்கம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.

    இதனிடையே சாலையில் விழந்த மின்கம்பத்தால் மின் கம்பிகள் ஆங்காங்கே தொங்கியது . இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாணாவரம் மற்றும் போலீசார், பாணாவரம் துனை மின் நிலைய போர்மேன் விஜயகுமார், காமராஜ், சா்தாா் உள்ளிட்ட 10-க்கும் மேற்ப்பட்ட மின் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அசம்பாவிதங்களை தடுத்திட போக்கு வரத்துக்கு தடைவித்து சாலையின் நடுவே விழுந்து கிடந்த மின்கம்பத்தையும், மின் கம்பிகளையும் அகற்றினர். ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக ஏற்ப்பட்டிருந்த போக்குவரத்தை சீா் செய்தனா்.

    இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் டிப்பா் லாரி டிரைவர் உத்திர பிரதேசத்தை சோ்ந்த ஷியாம் சிங் (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

    ×