search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் பேச்சு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வளர்மதி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் பயிர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை, ராணிப்பேட்டை மாவட்ட த்தில் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும், அனா தினம் நிலம் என குறிப்பிட பட்டுள்ளதால் பயிர் காப்பீடு பெற முடியவில்லை.

    சென்னசமுத்திரம் ஊராட்சி ஏரியில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ஊரகப் பகுதிகளில் கால்நடை மருத்துவர்கள் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும், மருந்தகங்களில் கால்நடை களுக்கு தேவையான மருந்துகள் வழங்க வேண்டும். ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு மற்றும் விஷாரம் ஆகிய நகராட்சிகளின் கழிவுநீர் பாலாற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும், முகுந்தராயபுரம் ரெயில்வே சுரங்கபாதையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதற்கு பதிலளித்து கலெக்டர் பேசுகையில், பயிர் விளைச்சலுக்கு ஏற்ற காப்பீடு வழங்கப்படுகிறதா என வேளாண் மற்றும் வருவாய் துறை அலு வலர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து காப்பீட்டு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்,

    ஆற்காடு பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது ,ராணிப்பேட்டை மாவட்டத்தில் 63 தொடக்க வேளாண்மை கட்டிடங்கள் உள்ளன விவசாயிகள் தங்களது நெல் மூட்டை களை தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடங்களில் 100 டன் வரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம், அனாதின நிலம் குறித்து காப்பீட்டு நிறுவனத்திடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், கால்நடை மருத்துவர்கள் மருந்தகங்களில் மட்டும் சிகிச்சை அளிக்காமல் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சிகிச்சை வழங்க வேண்டும், அனைத்து நகராட்சிகளிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இடம் தேர்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்து சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இடிந்து விழும் நிலையில் உள்ளது
    • புதிய கட்டிடம் அமைக்க வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் இரண்டும் தனித்தனியாக ஊரின் மையப்பகுதியில் உள்ளது.

    இந்த அலுவலகமானது கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் மேலாகி உள்ளன. தற்போது இந்த அலுவலகத்தின் மேற்கூரை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இதனால் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுகின்றன. இந்த கட்டிடத்தின் மேல் தளம் விரிசல்கள் ஏற்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழல் உள்ளது.

    இந்த ஆபத்தான கட்டிடத்தில் தற்போது இரு அலுவலகங்களும் செயல் படவில்லை.

    கிராமத்தில் உள்ள நூலக கட்டத்தின் சிறிய பகுதியில் தற்போது ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே போல் கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    கிராமத்தின் நடு பகுதியில் உள்ள இந்த இரு அலுவலக கட்டிடங்களும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு இந்த பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டி ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகத்தை பயன்பாட்டி ற்கு அளிக்க வேண்டும் என வெளிதாங்கிபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறத்தினர்
    • சத்துணவு ஓய்வு ஊதியர் சங்க மாவட்ட தலைவர் தலைமையில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சத்துணவு ஓய்வு ஊதியர் சங்க மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் சுசிலா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட முயன்றனர். இதை தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் சுமார் 100 பேரை கைது செய்தனர்.

    • தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கிறது
    • 64 நாட்கள் தொடர்ந்து காலை, மாலை இரு வேளைகளிலும் சிறப்பு பூஜை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பீடாதிபதி முரளிதரசுவாமிகளின் 63-வது ஜெயந்தி பூர்த்தி , பீடத்தின் 18-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மஹோத்சவம் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    64 நாட்கள் தொடர்ந்து காலை , மாலை இரு வேளைகளிலும் நடைபெறும் யாகத் திருவிழாவும், 64 நாட்களிலும் பரத நாட்டிய மாணவிகள், கலைஞர்கள் பங்கேற்கும் பரதத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு -கேது பெயர்ச்சி மகா யாகம் நாளை மறுநாள் 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறுகிறது.

    ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் ஆன ராகு கேதுவிற்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் , மாலையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் ராகு கேது பெயர்ச்சி மகா யாகமும் நடைபெறுகிறது.

    ராகு கேது பெயர்ச்சி யை முன்னி ட்டு மேஷம், ரிஷபம், மிதுனம் கடகம், சிம்மம், கன்னி, விருச்சி கம், தனுசு, கும்பம், மீனம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்களும், ராகு-கேது திசை, புக்தி நடைபெறுபவர்களும் மகா யாகத்தில் கலந்து கொண்டு பரிகாரங்கள் செய்து, சுவாமி தரிசனம் செய்து பயன் பெறலாம் என பீடாதிபதி முரளிதரஸ்வாமிகள் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்

    • ந.வ.கிருஷ்ணன் தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ஆற்காடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திமிரி எம்.ஜி.ஆர். திடலில் நேற்று நடந்தது.

    திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தாமரைப்பாக்கம் த.வ.கிருஷ்ணன், சொரையூர் எம்.குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். திமிரி பேரூர் கழக செயலாளர் டி.எஸ். கந்தசாமி வரவேற்றார்.

    ஆற்காடு நகர செயலாளர் சங்கர் ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஆற்காடு ஒன்றிய செயலாளர் சாரதி என்கிற ஜெயச்சந்திரன், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் ராகவன், விழா பாக்கம் பேரூராட்சி கழக செயலாளர் இராம.சேகர், கலவை பேரூராட்சி கழக செயலாளர் சதீஷ், கலவை பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ் ஆகியோர் துவக்க உரையாற்றினர்.

    கழக அமைப்பு செயலாளர் முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்ட கழக செயலாளர் சுகுமார், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் அன்பழகன், சீனிவாசன், இளைஞர் அணி செயலாளர் ஏழுமலை, தலைமை கழக பேச்சாளர் பாஸ்கர், மாநில அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் தமிழரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். திமிரி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் உலகநாதன் நன்றி கூறினார்.

    முன்னதாக விழா பாக்கம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சுகுமார் அறிமுகம் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திமிரி எம்.ஜி.ஆர். திடலில் கணேஷ் குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆற்காடு தொகுதி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், மாவட்ட பிற அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

    • வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள இலுப்பை தண்டலம் கிராமத்தில் அனுமதி இன்றி மணல் கடத்தப்படுவதாக வருவாய் கோட்டாட்சியர் பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா இன்று அதிகாலை அப்பகுதியில் ரோந்து பணியில் அதிகாரிகளுடன் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பகுதியில் மணல் கடத்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் வருவதை கண்டவுடன் மணல் கடத்திக் கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    மேலும் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா மணல் கடத்திய லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தார். பறிமுதல் செய்த வாகனங்களை தக்கோலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டா கத்தியால் வெட்டினார்
    • வாலிபர் கைது-பரபரப்பு

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தின் அருகே மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கடையில் உள்ளன.

    முருகேஷ் என்பவர் பேன்சி ஸ்டோரும், பிரசாந்த் என்பவர் பூ வியாபாரமும் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மார்க்கெட்டில் திடீரென பட்டா கத்தியுடன் வாலிபர் ஒருவர் புகுந்தார்.

    கடைகளை மூடக்கோரி மிரட்டி முருகேசையும், பிரசாந்திடமும் தகராறில் ஈடுபட்டார். மேலும் பட்டா கத்தியால் அவர்களை வெட்டினார். இதில் இருவரும் காயமடைந்தனர்.

    இதனை தடுக்க வந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் வாலிபர்களை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது அவருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வெட்டு காயமடைந்த இருவரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர். ரகளையில் ஈடுபட்ட அம்பேத்கார் நகரை சேர்ந்த பரணி (வயது 25)என்பவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    டவுன் போலீஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட்டில் வாலிபர் புகுந்து வியாபாரிகளை பட்டா கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மீன் பண்ணையில் மீன்கள் உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டார்
    • உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வாலாஜா அடுத்த அம்மனந்தாங்கல் ஊராட்சியில் மீன்வளத் துறை மூலம் பிரதமரின் மத்திய சம்பர்த யோஜனா திட்டத்தின் மூலம் பயோ பிளாக் முறையில் அமைக்கப்பட்டுள்ள மீன் பண்ணையில் மீன்கள் உற்பத்தி செய்யப்படுவதை பார்வையிட்டார்.

    முசிறி ஊராட்சியில் விதை பண்ணை அமைத்து விதை நெல் நடவு செய்யப்பட்டுள்ள நிலத்தினையும், பாகவெளி ஊராட்சி காட்டேரி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறையின் மூலம் பண்ணை குட்டை அமைத்து மீன் வளர்ப்பு தொழில் நடைபெறுவதையும் கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்து, அறிவுரைகள் வழங்கினார்.

    ஆய்வின் போது பல்வேறு அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் உடன்இருந்தனர்.

    • 3 உண்டியல்களை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட் சிக்கு உட்பட்ட மலைமேடு கிராமத்தில் மலைமீது குமரன் கோவில் உள்ளது. இங்கு தின மும் ஏராளமன பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து வள்ளி, தெய் வானை கழுத்தில் இருந்த 4/2 பவுன் மாங்கல்யம், 3 உண்டி யல்களை உடைத்து சுமார் ரூ.30 ஆயிரம் பணம் ஆகிய வற்றை திருடிச்சென்றுள்ளனர்.

    நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற நிர்வாகிகள் பூட்டு உடைக்கப் பட்டு நகை மற்றும் பணம். திருடப்பட்டிருப்பதைகண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சென்று பார்வை யிட்டு விசாரணை நடத்தி னர்.

    • ஆற்காடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
    • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள வேப்பமரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து போலீசார் தூக்கில் பிணமாக கிடந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து விளக்கம்
    • எராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சார்பாக சிப்காட்டில் உள்ள தனியார் பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நடந்தது.

    நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமை தாங்கினார். தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு பிரிவு மேலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.

    தொழிலாளர்களுக்கு மொபைல் போன் அழைப்புகள் மூலம் நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்படாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்தும் விரிவாக தெரிவிக்கப்பட்டது.

    இதில் சிப்காட் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சஞ்சீவிராயன் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை
    • சாலை வசதியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக்குழு மாதாந்திர கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கி னார். துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி ஆகியோர் வரவேற்றனர்.

    கூட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் மற்றும் சாலை வசதியை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் மழைக்காலங்களில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ×