search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை அருகே கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த மாடு மீட்பு
    X

    தீயணைப்பு வீரர்கள் பசுவை கயிறு கட்டி மீட்ட காட்சி.


    செங்கோட்டை அருகே கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த மாடு மீட்பு

    • பெருமாளுக்கு சொந்தமான பசுமாடு 10 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடியது.
    • தீயணைப்பு துறையினர் பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள சத்தியவாணி முத்துநகர் பண்பொழி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருக்கு சொந்தமான பசுமாடு 10 அடி ஆழம் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடியது. இதுகுறித்து செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து அங்கு விரைந்த நிலைய அலுவலர் சிவசங்கரன் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் மாரியப்பன், சண்முகவேல், பூபாலன், செந்தில்குமார், இசக்கிதுரை, ஜெகதீஷ் உள்ளிட்ட குழுவினர் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.துரிதமாக செயல்பட்டு பசுவை மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×