என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.18 லட்சம் மதிப்பில் கழிவறை கட்டிடம்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர்.
- சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி, ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி சரியாக இல்லாத காரணத்தால் கழிப்பறை வசதி செய்து தருமாறு பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனிடம் கோரிக்கை வைத்தனர்.
அவர்களது கோரிக்கையையேற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது. அதனை பள்ளி மாணவி களின் பயன்பாட்டிற்காக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்த வைத்தார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சந்திரசேகர், செல்லப்பாண்டி, கக்கன், பேரூராட்சி தலைவர் தஸ்லிமா அயூப்கான், ஏர்வாடி நகர காங்கிரஸ் தலைவர் ரீமா பைசல், தி.மு.க. நகர செயலாளர் அயூப்கான்,களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கனகராஜ், பாளை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கணே சன், வார்டு கவுன்சிலர்கள் அலிமா, ஜன்னத், மீரா சாகிப், தஸ்லிமா முகைதீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்வர் சரீப், ஏர்வாடி காங்கிரஸ் நகர பொருளாளர் பொன் ராஜ், நகர துணை தலைவர் சாகுல் ஹமீது, காங்கிரஸ் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கல்பத்து, காங்கிரஸ் கமிட்டி நிர்வா கிகள் பீர், அப்பாஸ், சினான், ஜாபர் அமானு ல்லா, ஷேக், அப்துல் ரகுமான், மீரான் டேனியல், முத்துராமலிங்கம், சுதா, ஜெயந்தி, லதா மற்றும்
காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சி தோழமைகள் மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.