search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஊட்டி மாஸ்டர் பிளானில் திருத்தம் செய்ய வேண்டும்- பொறியாளர்கள் கோரிக்கை
    X

    ஊட்டி மாஸ்டர் பிளானில் திருத்தம் செய்ய வேண்டும்- பொறியாளர்கள் கோரிக்கை

    • மாவட்ட திட்டக்குழுவில் குறைந்தபட்சம் 2 சிவில் பொறியாளர்கள் இடம்பெற வலியுறுத்தல்
    • ஒற்றை சாளர இணையத்தில் தேவையற்ற செயல்முறைகளை நிராகரிக்க தீர்மானம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அனைத்து சிவில் என்ஜினீயா் அசோசியேஷன் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவா் ராஜேஷ்தமிழரசன் தலைமையில் நடந்தது. இதில் ஊட்டி, குன்னூா் நகராட்சிகளின் ஆணையா் ஏகராஜ் கலந்துகொண்டு பொறியாளர்களுக்கு அங்கீகார சான்றிதழ்களை வழங்கினாா்.

    தொடர்ந்து 2023-ம் ஆண்டுக்கான நிர்வாகிகளாக தேர்வாகி உள்ள தலைவர் கிறிஸ்டோபர் திலக்குமார், செயலர் மாதேஷ்ராஜன், பொருளாளர் ஹரிஹரன், துணைத்தலைவர் பத்மநாபன், இணை செயலாளர் பிரதீப் ஆகியோருக்கு மாநிலத் தலைவர் ராஜேஷ் தமிழரசன் கவுரவப் பட்டையுடன் சங்கக்கொடியை ஒப்படைத்தார்.

    முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், மாவட்ட திட்டக் குழுவில் குறைந்தபட்சம் 2 சிவில் பொறியாளர்களை இடம்பெற செய்ய வேண்டும்,

    குன்னூர், ஊட்டி மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள மாஸ்டர் பிளானில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அதனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    ஒற்றை சாளர இணையத்தில் தேவையற்ற குழப்பமான நகல் செயல்முறைகளை நிராகரிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தின் 6 தாலுகாக்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×