என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆடுதுறை பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் தார்சாலைகள், வடிகால் சீரமைப்பு பணிகள்
- பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் வி.சிவலிங்கம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோ.சி. இளங்கோவன், ஆர். வி. குமார், ரா. சரவணன், பரமேஸ்வரி, முத்துபீவி, மீனாட்சி, செல்வராணி, எஸ்.மாலதி, ம. க. பாலதண்டாயுதம், கண்ணன், கே.சாந்தி, எஸ்.சுகந்தி , எஸ்.சமீம்நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த 75ம் ஆண்டு சுதந்திர தின மெகா பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது.
பேரூராட்சி பொது நிதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் பத்தாவது வார்டில் சிறு பாலம் கட்டுவது, 12 வது வார்டில் மழை நீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் சீரமைப்பது, 13 வது வார்டில் மண் சாலைகளை தார் சாலைகளாக போடுவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.