என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவை பள்ளி அருகே அரசமரம் வேரோடு சாய்ந்தது
Byமாலை மலர்4 July 2023 1:20 PM IST
- பள்ளிக்கு அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் நின்றது.
- குழந்தைகள் யாரும் வெளியில் இல்லாததால் அங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
வடவள்ளி,
கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த ஹைஸ்கூல்புதூர், கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் நின்றது.
இந்த நிலையில் அங்கு நேற்று மதியம் பலத்த காற்று வீசியது. இதில் அரசமரம் வேரோடு சாய்ந்தது. இதனை தற்செயலாக பார்த்த பொதுமக்கள் விலகி ஓடினார்கள். இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார்.
இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஹைஸ்கூல்புதூர் கூத்தாண்டவர் கோவில் தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மரம் முறிந்து விழுந்தபோது, குழந்தைகள் யாரும் வெளியில் இல்லை. எனவே அங்கு பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
Next Story
×