search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்- விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்

    • கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
    • கோவையில் உள்ள நீர் நிலைகளில் இறைச்சி கழிவுகள் போன்றவைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்தி குமார்பாடி தலைமையில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், தொண்டாமுத்தூர், போளுவாம்பட்டி, புலுவப்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூார், காரமடை போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கோவையில் உள்ள உழவர்சந்தைக்கு காய்கறிகள் உற்பத்தியை பஸ்சில்கொண்டு வருகிறார்கள். தினசரி காலையில் வந்து மதியம் வரை மார்க்கெட் வருகிறார்கள்.

    விவசாயிகள், விவசாய குடும்பத்தினர், கிராமங்களிலிருந்து நகரத்திற்கு வரும போதும், நகரத்திலிருந்து கிராமங்களுக்கு செல்லும்போதும் விவசாய பணிகள், விவசாய கூட்டங்களில் பங்கேற்க வரும் போதும் பஸ் கட்டணங்கள் அவர்களுக்கு சுமையாக உள்ளது. எனவே அவர்களுக்கு தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

    60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வு ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இதனை இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழகத்தில் தமிழக அரசு அமல்படுத்தி முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

    கோவையில் உள்ள நீர் நிலைகளில் இரவு நேரங்களில் கட்டிடக் கழிவுகள், குப்பைகள், இறைச்சி கழிவுகள் போன்றவைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். தொண்டாமுத்தூர் ஒன்றியம் நரசிபுரம், பச்சாவயல் தடுப்பணை உடைப்பை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×