என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பழனி கோவிலில் முதல் நாள் உண்டியல் வசூல் ரூ.1.20 கோடி கிடைத்தது
- காணிக்கை பணம் எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது.
- 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், கோவில் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.
பழனி:
பழனி கோவிலில் கடந்த 27 நாட்களில் உண்டியல்கள் நிறைந்ததை தொடர்ந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தின் புதிய உத்தரவின்படி ஆண் பணியாளர்கள் வேட்டி அணிந்து வந்திருந்தனர். மேலும் உள்ளே வரும் நேரம், வெளியே செல்லும் நேரம் ஆகியவை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது.
கண்காணிப்பு காமிராக்களிலும் காணிக்கை எண்ணும் பணி கண்காணிக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், கோவில் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர். முதல்நாள் உண்டியலில் ரொக்கமாக ரூ.1 கோடியை 80 லட்சத்து 31 ஆயிரத்து 420 கிடைத்தது. 1121 கிராம் தங்கம், 19317 கிராம் வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் 131 ஆகியவை கிடைத்தன.
உண்டியல் எண்ணும் பணியை கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பொறுப்பு பிரகாஷ், உதவி ஆணையர் லட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர். இன்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்து வருகிறது.