search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.5 லட்சம் வாடகை பாக்கி- நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான 2 கடைகளுக்கு சீல் வைப்பு
    X

    வாடகை செலுத்தாத கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

    ரூ.5 லட்சம் வாடகை பாக்கி- நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான 2 கடைகளுக்கு 'சீல்' வைப்பு

    • நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை கட்டணம் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 748 -ஐ உடனடியாக கட்டுமாறு அறநிலைய த்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.

    சுவாமி சன்னதி தெருவில் சுவாமி அனுப்பு மண்டபத்தில் முருகன், பொன்னையா என்பவர்கள் கடை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தாமல் வந்துள்ளனர்.

    இதுவரை கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை கட்டணம் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 748 ஆகும். இதனை உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் கட்டுமாறு அறநிலையத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் வாடகை செலுத்தாத 2 கடைகளையும் சீல் வைக்குமாறு உத்தரவிட ப்பட்டுள்ளது. அதன்பேரில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் இன்று சம்பந்தப்பட்ட 2 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பின்னர் 2 கடைகளின் சாவிகளும் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணியிடம் வழங்கப்பட்டது.

    அப்போது கண்காணிப்பாளர் சுப்பு லெட்சுமி, மேற்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி என்ற வள்ளி, வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அதிகாரி ராஜா, அங்கப்பன், தலையாரி முண்டசாமி, இன்ஸ்பெக்டர் இளவரசர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×