என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருக்குறுங்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட வாழைகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆய்வு
- திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது.
- இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள 5 லட்சம் வாழைகள் நோயால் பாதிக்கப்பட்டு, வாடி, வதங்கி காணப்படுகிறது.
களக்காடு:
திருக்குறுங்குடி, சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுபுறப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாழைகளை நோய் தாக்கி வருகிறது.
இந்த நோய் தாக்கிய வாழை மரங்களின் இலைகள் பழுத்து, மஞ்சள் நிறமாகி, பின்னர் கருகி விடுகிறது. இதனால் வாழைகள் முழுவதுமாக சேதமடைகிறது. 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள 5 லட்சம் வாழைகள் நோயால் பாதிக்கப்பட்டு, வாடி, வதங்கி காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் திருக்குறுங்குடியில் நோயால் பாதிக்கப்பட்ட் வாழைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயின் தாக்கம் குறித்து விவசாயிகளிடமும் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
வாழைகளை நோய் தாக்கியது எப்படி என்பதை கண்டறிய வேண்டும். களக்காடு பகுதி வாழைகளை நம்பியுள்ள பகுதி ஆகும். மனிதர்களுக்கு நோய் பரவுவது போல் வாழைகளுக்கும் இந்த நோய் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக நிவாரணம் வழங்குவார் என்றார்.
அவருடன் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், களக்காடு உதவி இயக்குனர் சண்முகநாதன், தோட்டக்கலைத்துறை அதிகாரி இசக்கிமுத்து, உதவி அலுவலர் கிளாரன்ஸ் ஜோன்ஸ், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர்,
கக்கன், செல்லப்பாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர் நம்பித்துரை, திருக்குறுங்குடி பேரூராட்சி, களக்காடு நகராட்சி, பாளை தெற்கு வட்டாரம், காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் ராசாத்தி அம்மாள், ஜார்ஜ் வில்சன், நளன், திருக்குறுங்குடி நகர தி.மு.க செயலாளர் கசமுத்து, சுரேஷ், நாங்குநேரி, களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சுந்தர், ஜெயசீலன், வின்சென்ட் குமார், துரை உள்பட பலர் சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்