search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்105 டிகிரியை தாண்டி கொளுத்தும் வெயில்
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில்105 டிகிரியை தாண்டி கொளுத்தும் வெயில்

    • கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • இதேபோல நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழகத்திலேயே ஈரோட்டுக்கு அடுத்த படியாக அதிகபட்சமாக 105.44 டிகிரி வெயல் பதிவாகி உள்ளது.

    சேலம்:

    கோடை வெயில் தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலத்தில் கடந்த 14-ந் தேதி அதிகபட்சமாக 105.4 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் 2-வது முறையாக வெப்பநிலை நேற்று அதிகபட்சமாக 105.08 டிகிரி பதிவாகி யுள்ளது. வரும் காலங்க ளில் வெப்பநிலை அதிக ரிக்கும் என்பதால் வெயி லின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் கடுமையான வெயில் தாக்கம் காரணமாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வரு கிறார்கள். பகல் நேரங்களில் பயணத்தை தவிர்த்து மாலை நேரங்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

    இதேபோல இளநீர், சர்பத் கடைகள், கம்மங்கூழ், கரும்புச்சாறு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது வெயில் சீசன் தொடங்கி விட்ட நிலையில் நுங்கு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. அதேபோல மாம்பழம், பலாப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

    கடும் வெயில் காரணமாக மதிய நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாமல் வெயில் தாக்கம் உள்ளது. பகலில் கடுமையான வெப்பம் காரணமா கவும் இரவு நேரங்களில் புழுக்கம் காரணமாகவும் தூங்க முடியாமல் பொது மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இதேபோல நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தமிழகத்திலேயே ஈரோட்டுக்கு அடுத்த படியாக அதிகபட்சமாக 105.44 டிகிரி வெயல் பதிவாகி உள்ளது. இதனால் நாமக்கல் மாவட்டத்திலும் காலை முதலே வெயில் சுட்டெரிக்கிறது.

    வெயிலின் தாக்கத்தி லிருந்து தப்பிக்க பொது மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படு கின்றன. இனி வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்கும் படி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Next Story
    ×