என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையில் மலிவு விலையில் தரமான பட்டாசுகள் அதிகாரி தகவல்
- கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலை மற்றும் விற்பனை சங்கங்களில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது.
- சேலம் மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் பட்டாசு விற்பனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.
சேலம்:
சேலம் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
சேலம் மாவட்ட கூட்டுறவு பட்டாசு கடைகளில் தரமான பட்டாசுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் ஆண்டுதோறும் சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலை மற்றும் விற்பனை சங்கங்களில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டும் சிவகாசியிலிருந்து ஸ்டேண்டர்டு, அணில் போன்ற சிறந்த கம்பெனிகளிலிருந்து ரூ.1.36 கோடி அளவில் பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையில் (பொன்னி கூட்டுறவு சிறப்பங்காடி) பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் சேலம் மாவட்டத்தில் மேலும் 6 இடங்களில் பட்டாசு விற்பனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது. மேலும் இளம்பிள்ளை தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, காடையாம்பட்டி தொடக்க கூட்டுறவு பண்டக சாலை, மேட்டூர் அரசு பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை, ஸ்வர்ணபுரி தொடக்க கூட்டுறவு பண்டக சாலை என்ஜீஜிஓ தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகளில் பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைமையகங்களில் மொத்தமாகவும் மற்றும் சில்லரையாகவும் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் நியாயமான விலையில் தரமான பட்டாசுகளை வாங்கி பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.