என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் சரிவுசேலம் வெள்ளி கொலுசுகள் விற்பனை அதிகரிப்பு
- சேலத்தில் தயாரிக்கப்படும் கொலுசுகள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேஷம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக வெள்ளி நகை தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
சேலம்:
சேலம் வெள்ளி கொலுசு கலைநயங்களுடன் தயாரிக்கப்ப டுவதால் அதற்கென தனி மவுசு உண்டு.இதனால் சேலத்தில் தயாரிக்கப்படும் கொலுசுகள் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேஷம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக வெள்ளி நகை தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதனால் வெள்ளி தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான பட்டறைகளும், அதனை நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிக மான தொழிலாளர்களும் உள்ளனர். குறிப்பாக சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, ஆண்டிப்பட்டி, நங்க வள்ளி, ஜலகண்டாபுரம் உள்பட பல பகுதிகளில் அதிக அளவில் கொலுசு பட்டறைகள் உள்ளது. இதன் மூலம் அதிக அளவில் சேலத்தில் கொலுசு, தண்டை, அரைஞான் கொடி உள்பட வெள்ளி நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி கொண்டா டப்பட உள்ளது. இதனால் தற்போதே வெள்ளி கொலுசு உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே கடந்த வாரம் 74 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளி தற்போது 69 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. இதனால் ஒரே வாரத்தில் கிலோவுக்கு 5 ஆயிரம் சரிந்துள்ளதால் வெள்ளி கொலுசு உட்பட நகைகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் தற்போது வெள்ளி நகைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மேலும் வட மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வெள்ளி கொலுசுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. இதனால் வெள்ளி தொழில் சுறு சுறுப்பு அடைந்துள்ளது. இனி வரும் நாட்கள் பண்டிகை காலம் என்ப தால் வெள்ளி கொலுசு உட்பட வெள்ளி நகைகள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பதால் வெள்ளி பட்டறையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்