search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வு கூட்டம்
    X

    சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற காட்சி.

    சேலத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வு கூட்டம்

    • சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
    • சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

    சேலம்:

    சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சேலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுடனான விழிப்புணர்வுக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் கலெக்டர் பேசியதாவது:-

    சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த விழிப்புணர்வினை உள்ளூர் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

    சேலம் மாவட்டம் தொழில் நிறுவனங்கள் தொடங்கத் தேவையான ஒப்புதல்கள், தடையின்மைச்சான்றுகள், புதுப்பித்தல் போன்றவற்றை எளிதாகப் பெற ஒரு ஒற்றைச் சாளர தீர்வுக்கான இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பி டப்பட்ட கால வரம்புக்குள் பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

    இதனைக் கண்காணிக்க மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. தொழில்முனைவோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட மாவட்ட நிர்வாகம் எப்போதும் தயாராக உள்ளது. எனவே, தொழில்முனைவோர் சேலம் மாவட்டத்தில் மென்மேலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் 4,334 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 124 தொழில் முனைவோர்கள் ரூ.1,638.91 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் சிவகுமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பெரியசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், இந்திய தொழில் கூட்டமைப்பு (மாநில எம்.எஸ்.எம்.இ கொள்கை) சுதாகர், மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்க பொதுச் செயலாளர் செந்தில்முருகன், உற்பத்தி திறன் குழுத் தலைவர் இளங்கோவன், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் நாகராஜன் மற்றும் தொழில் வணிக சங்கப் பிரதிநிதிகள், தொழில திபர்கள், தொழிலார்வம் கொண்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×