என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
- கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது.
- வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் சாமந்தி, சம்பங்கி, குண்டு மல்லி, முல்லை பூ, அரளி, துளசி உள்பட பூக்களின் விற்பனை களை கட்டியது. இதனால் பூக்களில் விலையும் அதிகரித்தது.
சேலம்:
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மண்டல பூஜையையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்றும் அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.
இதையொட்டி கார்த்திகை மாதம் 1-ந் தேதியான இன்று அதிகாலை முதலே ஏராள மான அய்யப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். குறிப்பாக சேலத்தில் சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலில் 500-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் இன்று அதிகாலை யிலேயே குவிந்தனர். அவர்கள் அய்யப்பனைமணமுருக வணங்கி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இதே போல சேலம் சுகவனேஸ்வரர் கோவில், ராஜகணபதி கோவில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில், அம்மாப்பேட்டை குமரகிரி சுப்பிரமணியசாமி கோவில், டவுன் ரெயில் நிலையம் அய்யப்பன் கோவில், ஊத்து மலை முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன், அய்யப்பன் கோவில்களிலும் அய்யப்ப பக்தர்கள் இரு முடி கட்ட ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்த கோவில்களில் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
இதனால் சேலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சரணம், சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் ஒலித்தது. இதையொட்டி கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய இன்றே நடை பாதை யாகவும், வாகனங்களிலும் ஏராளமா னோர் புறப்பட்டு சென்றனர்.
இதையொட்டி சேலம் சின்ன கடை வீதியில் கார்த்திகை விரதம் தொடங்கிட தேவையான துளசி மணி மாலை, வேட்டி துண்டுகள், அய்யப்பன் டாலர், இரு முடி பை, சந்தனம், ஜவ்வாது, விபூதி, குங்குமம், இருமுடிக்கு தேவையான தேங்காய், பொரி, முந்திரி, திராட்சை , ஏலக்காய், அச்சுவெல்லம், பச்சரிசி ஊதுவத்தி , நெய் உள்பட பூஜை பொருட்கள் வாங்க கடைவீ தியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் சாமந்தி, சம்பங்கி, குண்டு மல்லி, முல்லை பூ, அரளி, துளசி உள்பட பூக்களின் விற்பனை களை கட்டியது. இதனால் பூக்களில் விலையும் அதிகரித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்